< Back
மாநில செய்திகள்
பழைய பொருட்களை சாலையில் குவித்து எரித்த பொதுமக்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பழைய பொருட்களை சாலையில் குவித்து எரித்த பொதுமக்கள்

தினத்தந்தி
|
15 Jan 2023 12:28 AM IST

பழைய பொருட்களை சாலையில் குவித்து பொதுமக்கள் எரித்தனர்.

தை பொங்கலுக்கு முதல் நாளை போகி பண்டிகையாக 'பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடுவது வழக்கம்'. இந்நாளில் தமிழர்கள் திருமகளை வரவேற்கும் விதமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருட்களையும், தங்கள் வசமுள்ள டயர்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இத்தகைய செயற்கை பொருட்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகளான சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது. இதுபோன்று காற்றை மாசுபடுத்தும் செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்டி தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில் போகிப்பண்டிகையன்று பெரம்பலூர் மாவட்டத்தில் டயர்கள், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் இதர கழிவுப்பொருட்களை கொளுத்தாமல் குப்பைகளை முறைப்படி அகற்றி போகி திருநாளை மாசு இல்லாமல் கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் மாவட்டத்தில் நகர்ப்பகுதியில் ஒரு சில இடங்களிலும், கிராமப்புறங்களில் சில இடங்களிலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய வேண்டாத பொருட்களை சாலையோரத்தில் குவித்து வைத்து எரித்து போகி பண்டிகையை கொண்டாடினர்.

மேலும் செய்திகள்