< Back
மாநில செய்திகள்
தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
30 Aug 2023 2:58 AM IST

சேரன்மாதேவியில் தார் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி யூனியன் அலுவலகம் அருகே சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 1½ வருடங்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றிவிட்டு மண் சாலை அமைக்கப்பட்டது. இதனால் புழுதி பறந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சேரன்மாதேவி - அம்பை பைபாஸ் சாலையில் யூனியன் அலுவலகம் அருகே நேற்று பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை சேரன்மாதேவி போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்