< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவள்ளூரில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
|22 Aug 2023 6:59 PM IST
திருவள்ளூரில் வழங்கப்பட்ட பட்டாவுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள இடத்தில் தாமரைப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தமிழ்காலனி, தாமரைப்பாக்கம் காலனி, தெலுங்கு காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசால் வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டது.
ஆனால் அதற்கான இடத்தை அதிகாரிகள் இந்நாள்வரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே பட்டா கொடுத்தும் நிலத்தை காட்டாததை கண்டித்து பொதுமக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட 50 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.