< Back
மாநில செய்திகள்
சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சி... வடமாநில தொழிலாளரின் காலில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு
மாநில செய்திகள்

சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சி... வடமாநில தொழிலாளரின் காலில் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு

தினத்தந்தி
|
20 Jan 2023 1:33 PM IST

பல்லாவரம் அருகே கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

பீகார் மானிலத்தை சேர்ந்தவர் இனசேர் ஆலாம் (27) திரிசூலம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார், நேற்று காலை வழக்கம் போல் திரிசூலம் பெரியார் நகரில் இரண்டாவது தளத்தில் வெளிபுறம் கட்டிட பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்த போது திடிரென வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அலறி துடித்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக காலில் குண்டுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரின் காலில் இருந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் நீக்கினர்.

இது குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து போலீசார் நடத்திய விசாரனையில் மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட குட்ட மலை பகுதியில் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்த போது இனசாம் ஆலம் காலில் குண்டு பாய்ந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்