< Back
மாநில செய்திகள்
மதுரையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். வளாகத்தில் ஆயுத பூஜை விழா
மாநில செய்திகள்

மதுரையில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப். வளாகத்தில் ஆயுத பூஜை விழா

தினத்தந்தி
|
18 Sept 2022 1:57 AM IST

மதுரை விமான நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எஃப்.) வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

மதுரை,

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி பாதுகாப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை துணை அமைப்புகள் ஆயுத பூஜை கொண்டாடுவது வழக்கம். அதன்படி மதுரை விமான நிலையில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை(சி.ஐ.எஸ்.எஃப்.) வளாகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆயுத படையினரின் துப்பாக்கிகள், பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆயுத படை வளாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்