< Back
மாநில செய்திகள்
நவீன அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் திடீர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நவீன அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் 'திடீர்' ஆய்வு

தினத்தந்தி
|
13 April 2023 1:25 AM IST

நவீன அரிசி ஆலைகளில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ‘திடீர்' ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருப்பு வைக்கப்படுகிறது. பின்னர் அந்த நெல் மூட்டைகள் நவீன அரிசி ஆலைகள் மூலம் ரேஷன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வாகன சோதனையிலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், நவீன அரிசி ஆலைகளிலும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவின் படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா வழிக்காட்டுதலின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன் தலைமையில் பெரம்பலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி, தேனூரில் உள்ள நவீன அரிசி ஆலைகளில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஆலைகளுக்கு நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து கொண்டு வரப்படும் நெல் தரமாக இருக்கிறதா? ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா? மேலும் ரேஷன் அரிசி பாலீஸ் செய்யப்பட்டு வேறு எங்கேயும் கடத்தப்படுகிறதா? என்பதனையும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்