< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
புனித சவேரியார் ஆலய தேர்பவனி
|16 Aug 2023 2:53 AM IST
புனல்வாசல் புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடந்தது.
திருச்சிற்றம்பலம்;
திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித சவேரியார் தேவாலயத்தில் புனல்வாசல் பங்கு மக்களின் 49- வது ஆண்டு திவ்ய நற்கருணை விழா, தேர்பவனி, சுதந்திர தின விழா நடந்தது. பட்டுக்கோட்டை மறை மாவட்ட அதிபர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். புனல்வாசல் பங்கு தந்தை ஜான் எட்வர்ட், உதவி தந்தை அற்புத சந்தியாகு மற்றும் உதவி தந்தையர்கள், அருட் சகோதரிகள் கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அன்னை மரியாளின் தேர் பவனி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை . ஆலய நிர்வாகி ராயப்பன் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.