தர்மபுரி
நல்லம்பள்ளி அருகேபுனித சவேரியார் ஆலய பெரியதேர் பவனி
|நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே கோவிலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் மகிமை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான மகிமை என்ற பங்கு பெருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார். பின்னர் இயேசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடக நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை உயிர்த்த ஆண்டவர் நிகழ்ச்சி, சேலம் மண்டல மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் புனித சவேரியார் குளத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியதேர் பவனியும், திருப்பலி கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஜேசுதாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.