< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
தென்கரைக்கோட்டைகார்மேல் அன்னை ஆலயத்தில் சிலுவைபாடு நிகழ்ச்சி
|8 April 2023 12:30 AM IST
மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நடைபெற்றது. அருட்தந்தை மதலை முத்து, தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலய பங்குத்தந்தை வினோத் லூயில் ஆகியோர் தலைமை தாங்கினர். 300-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தவாறு தென்கரை கோட்டை பஸ் நிறுத்தம் முதல் கார்மேல் அன்னை ஆலயம் வரை 14 தலங்களை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு தலங்களிலும் ஜெபம் செய்தபடி தவப்பயணம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கார்மேல் அன்னை ஆலய பங்கு மக்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.