< Back
மாநில செய்திகள்
திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில்  இயேசு பிறப்பு விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இயேசு பிறப்பு விழா

தினத்தந்தி
|
17 Dec 2022 12:15 AM IST

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபை மற்றும் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் இயேசு பிறப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து திருநங்கைகளுக்கான நடன போட்டி, அழகி போட்டி, மியூசிக்கல் பலூன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபை இயக்குனர் கெவின் பேசினார். சிறப்பு விருந்தினர்களாக டேவிட் சுரேஷ், பகுதி தலைவர் சாந்தி, திருச்செங்கோடு சபை தலைவர் சத்யராஜ், செயலாளர் பீட்டர் செல்வராஜ், ஆயர் ஜேம்ஸ் ராபர்ட், திருநங்கைகள் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சுவிஷேச ஜஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் சைவ, அசைவ உணவு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்