< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
23 Dec 2023 4:25 AM IST

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மற்றும் 31-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து பெங்களூரு மாநிலம் மங்களூரு மற்றும் கேரள மாநிலம் கொல்லம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தாம்பரத்தில் இருந்து மங்களூருக்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் 30-ந்தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்- 06129) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக மங்களூருவில் இருந்து தாம்பரத்திற்கு 25 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06130) இயக்கப்படுகிறது.

மேலும், தாம்பரத்தில் இருந்து கொல்லத்திற்கு இன்று (சனிக்கிழமை) மற்றும் 30-ந்தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06119) இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து தாம்பரத்திற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31-ந்தேதிகளில் காலை 10.45 மணிக்கு சிறப்பு ரெயில் (06120) இயக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்