< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் விழா

தினத்தந்தி
|
26 Dec 2022 1:39 AM IST

கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

கூடங்குளம்:

கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வேர்ட் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியது. பள்ளி தாளாளர் தினேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக எட்வர்ட் டேனியல் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் செய்தி அளித்தார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஏழைகளுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

இதில் ஹார்வேர்ட் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி, டாக்டர் ஸ்டீவ், துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மெட்ரிக் பள்ளி முதல்வர் முருகேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்