< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா
|24 Dec 2022 4:43 AM IST
கிறிஸ்துமஸ் விழா நடந்தது
திசையன்விளை:
திசையன்விளை சமாரியா தூய யோவான் மேல்நிலைப்பள்ளியில் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சி மின்கேல் வரவேற்று பேசினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்சிகள் நடந்தது. திசையன்விளை கட்டிட பொறியாளர் சங்கத் தலைவர் ஆனந்தராஜ் மாணவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கினார். விழாவில் பேரூராட்சி கவுன்சிலர் அலெக்ஸ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானசேகரன், கட்டிட பொறியாளர் சங்க செயலாளர் எட்வின் சாமுவேல், இணைச் செயலாளா் மணிகண்ட பிரபு, தொழில் அதிபர்கள் ஆன்ட்ரூஸ், சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.