திருநெல்வேலி
கிறிஸ்துமஸ் விழா
|சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது
வள்ளியூர்:
சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்றார். வள்ளியூர் பாத்திமா தேவாலய அருட்தந்தை ஜான்சன் அடிகளார் ஆரம்ப ஜெபம் செய்து கிறிஸ்துமஸ் நற்செய்தி வழங்கினார். கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு, இனிப்புகளை வழங்கினர். கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து இருந்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
* வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கல்லூரி நிறுவன தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். மாணவிகள் இறைவணக்கப் பாடல் பாடினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில், கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார்.