< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
23 Dec 2022 8:10 PM IST

விடுமுறைகளை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் பணிபுரியும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் விடுமுறைகளை கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையை அடுத்த தாம்பரம், வண்டலூர், பெருங்களத்தூர், ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெருங்களத்தூரில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருக்கின்றனர். இதனால் அங்கு போக்குவர்த்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தாம்பரம், பெருங்களத்தூர், ஓட்டேரி, வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் வெளியூர்களுக்கு பயணம் செய்து வருவதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்