< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை.. - மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்
|25 Dec 2023 8:07 PM IST
உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சென்னையில் சாந்தோம் மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் வழிபாடு நடத்திவிட்டு ஏராளமான பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர்
குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை தந்த பொதுமக்கள், கடற்கரையில் நேரத்தை செலவழித்தனர். உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் அதிக அளவில் மெரினா கடற்கரைக்கு வருகை தந்தனர்.