< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னை-கோழிக்கோடு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்
|24 Dec 2023 6:36 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
சென்னை,
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்க சென்னை சென்டிரல்-கோழிக்கோடு இடையே ஒருவழி வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து நாளை (25-ந்தேதி) காலை 4.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06041) அதேநாள் மதியம் 3.20 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.