அரியலூர்
அலங்கார அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
|அலங்கார அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதற்கு பங்கு தந்தை பெலிக்ஸ் சாமுவேல் தலைமை தாங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் மாட்டு தொழுவத்தில் குழந்தை இயேசு பிறந்ததை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினர். இதேபோல் ஆண்டிமடம் புனித மார்ட்டினார் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பின் நிகழ்வினை சித்தரிக்கும் வகையில் மாட்டு தொழுவம்போல் குடில் அமைத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தென்னூர் அன்னைலூர்து ஆலயத்தில் மரியநல்லூஸ்ராஜா, ஆண்டிமடம் மார்த்தினர் ஆலயத்தில் மரிய ஜொமிக்சாவியோ, பட்டன குறிச்சி லூர்துஅன்னை ஆலயத்தில் ஐஆல்பர்ட், கூவததூர் அந்தோணியார் ஆலயத்தில் மரியதாஸ், அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயத்தில் அடைக்கல சாமி, கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயத்தில் ஆல்பர்ட் புஷ்பராஜ், நெட்டலக்குறிச்சி புனித சவேரியார் ஆலயத்தில் இமானுவேல் ஆகிய பங்குதந்தையர்கள் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கூட்டு திருப்பலிக்கு தலைமையேற்று நடத்தினர்.