< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்...!
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார்...!

தினத்தந்தி
|
23 Dec 2023 1:36 PM IST

சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுவார்கள் என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

சென்னை,

உலகம் முழுவதும் வரும் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையில் மட்டும் சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

இதுகுறித்து கூறியதாவது, துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இதில் போலீசாருக்கு உதவியாக ஊர்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாளை இரவு முதல் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சிமுறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் சாதாரண உடையில் சென்று கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமான தேவாலயங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். மேலும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுவார்கள், என்று கூறினார்.

மேலும் செய்திகள்