< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா
|23 Dec 2022 12:15 AM IST
கடையநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் முத்துகிருஷ்ணவேணி தலைமை தாங்கி, அனைவருக்கும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் கபில்ராஜன் முன்னிலை வகித்தார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட மாணவர்கள், குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினர். மேலும் கிறிஸ்துமஸ் விழாவின் மகத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். குழந்தைகள் அனைவரும் சிவப்புநிற ஆடை அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் உரையாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாராட்டினர்.