விருதுநகர்
கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி
|கிறிஸ்துமஸ் கலை நிகழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூர்
டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு தொடக்கமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளம் சி.எஸ்.ஐ. பரிசுத்த பவுல் ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத பவனி தொடங்கியது. பின்னர் அத்திகுளத்தில் வடக்குதெரு, நாயுடு தெரு, நடுத்தெரு, திலகாபுரி தெரு மற்றும் பொட்டல்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருச்சபை மக்களின் குடும்பங்களை சந்தித்து சபை குரு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளை சபை போதகர் அருள்தனராஜ் ஜெபித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இயேசு பிறப்பை நினைவு கூறும் வகையில் பாடல்கள், குறு நாடகங்கள், கலை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. முடிவில் கடந்த வாரம் வேதாகம தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபை போதகர் பரிசு வழங்கினார். கிறிஸ்துமஸ் கீத பவனி வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.