< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
கிறிஸ்தவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
|1 Oct 2023 12:30 AM IST
தூத்துக்குடியில் கிறிஸ்தவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சி.எஸ்.ஐ. எபநேசர் ஆலய குருவானவரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, கிறிஸ்தவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
எனினும் இதுவரையிலும் ஆலய குருவானவரை இடமாற்றம் செய்யாததால், கிருஷ்ணராஜபுரம் சி.எஸ்.ஐ. எபநேசர் ஆலய வளாகத்தில் கடந்த 27-ந்தேதியில் இருந்து கிறிஸ்தவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 4-வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இதையடுத்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.