< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம்
|31 July 2023 12:15 AM IST
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினர் ஆர்ப்பாட்டம்
குலசேகரம்,
மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் சம்பவங்களை கண்டித்து கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ஈஞ்சக்கோடு, பொன்மனை பகுதி சார்பில் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஈஞ்சக்கோடு ஆலய பங்குத் தந்தை சேவியர் ராஜ் தலைமை தாங்கினார். பால்ராஜ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ், பொன்மனை பேரூராட்சித் தலைவர் அகஸ்டின், குலசேகரம் பேரூராட்சித் தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் என்.எஸ். கண்ணன், சிறுபான்மை கூட்டமைப்பு செயலாளர் வில்சன் ராஜ், திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வினுட்ராய், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெயசிங் மற்றும் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., இரட்சணிய சேனை ஆலய போதகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.