< Back
மாநில செய்திகள்
சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மாநில செய்திகள்

சித்திரை திருவிழா: வைகை ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
17 April 2023 10:55 PM IST

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பக்தர்கள் வைகையின் இருபுறமும் திரண்டு வருவது வழக்கம்.

மதுரை,

மதுரை மீனாட்சி -சுந்தரேசுவரர் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இதில் குறிப்பிடக்தக்கது சித்திரை பெருவிழா. 12 நாட்கள் நடக்கும். விழாவின்போது மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்து டன் விழா தொடங்குகிறது.

மே 5-ந்தேதி முத்திரை பதிக்கும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்க உள்ளது. அழகர் கோவிலில் இருந்து தங்க குதிரையில் புறப்பட்டு வரும் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்குவார். இந்த நிகழ்வை கண்டு களிப்பதற்காக மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வைகையாற்று பகுதியில் திரளுவார்கள்.

இதனை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ள ஆழ்வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்கு குப்பை குளங்களை அகற்றும்பணி நடந்து வருகிறது. சித்திரை திருவிழா நெருங்குவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.

மேலும் செய்திகள்