< Back
மாநில செய்திகள்
சித்ரா பவுர்ணமி திருவிழா
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சித்ரா பவுர்ணமி திருவிழா

தினத்தந்தி
|
7 May 2023 1:02 AM IST

சித்ரா பவுர்ணமி திருவிழா

பாபநாசம், அய்யம்பேட்டை பகுதி கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரைகாத்த முனியாண்டவர் கோவில்

பாபநாசம் வங்காரம்பேட்டை கரைக்காத்த முனியாண்டவர் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. வங்காரம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி, அக்னி கொப்பரை உள்ளிட்டவைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கரை காத்த முனியாண்டவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம், அலகு காவடி, பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கபிஸ்தலம்

கபிஸ்தலம் ஊராட்சி சீதாலட்சுமிபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர், மாரியம்மன், துர்க்கை அம்மன் கோவி்லில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது. முன்னதாக குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம், அக்னி கொப்பரை, பால்குடம், அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி தேவநாயகி அம்பாளுக்கும், சக்கரவாகேஸ்வரருக்கும் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்