சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
|சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமியும் ஒன்றாகும். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி நாள்ளிரவு நிறைவடைகின்றது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வேலூர் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி -வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. கனியம்பாடி(இரவு 10 மணி), கண்ணமங்கலம் (இரவு 10.17 மணி), ஆரணி சாலை(இரவு 10.34 மணி), போளூர்(இரவு 10.49 மணி), அகரம் சிப்பந்தி(இரவு 11.03 மணி), துரிஞ்சாபுரம் (இரவு 11.15 மணி) வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை - வேலூர் இடையே மே 5 மற்றும் 6 தேதி -திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. துரிஞ்சாபுரம்(அதிகாலை 4.08 மணி), அகரம் சிப்பந்தி (அதிகாலை 4.19 மணி), போளூர் (அதிகாலை 4.34 மணி), ஆரணி சாலை (அதிகாலை 4.49 மணி), கண்ணமங்கலம் (அதிகாலை 4.54 மணி), கனியம்பாடி (காலை 5.08 மணி) வழியாக வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடைகிறது.
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 5-ம் தேதி -விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம் (காலை 9.29 மணி), மாம்பழப்பட்டு (காலை 9.39 மணி), ஆயந்தூர்(காலை 9.45 மணி), திருக்கோவிலூர் (காலை 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (காலை - 10.08 மணி), அண்டம்பள்ளம் (காலை 10.14 மணி), தண்டரை (காலை 10.21 மணி) வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. தண்டரை (பகல் 12.57 மணி), அண்டம்பள்ளம் (பகல் - 1.14 மணி), ஆதிச்சநல்லூர் (பகல் 1.19 மணி), திருக்கோவிலூர் (பகல் 1.28 மணி), ஆயந்தூர் (பகல் 1.43 மணி), மாம்பழப்பட்டு (பகல் 1.49 மணி), வெங்கடேசபுரம் (பகல் 1.58 மணி) வழியாக விழுப்புரம் ரெயில் நிலையத்தை பிற்பகல் 2.15 மணிக்கு சென்றடைகிறது.
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி - விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. வெங்கடேசபுரம் (இரவு 9.29 மணி), மாம்பழப்பட்டு (இரவு 9.39 மணி), ஆயந்தூர்(இரவு 9.45 மணி), திருக்கோவிலூர் (இரவு 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (இரவு - 10.07 மணி), அண்டம்பள்ளம் (இரவு 10.13 மணி), தண்டரை (இரவு 10.20 மணி) வழியாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது.
திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே மே 5 மற்றும் 6-ம் தேதி -திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. தண்டரை (அதிகாலை 3.47 மணி), அண்டம்பள்ளம் (அதிகாலை 3.52 மணி), ஆதிச்சநல்லூர் (அதிகாலை 3.57 மணி), திருக்கோவிலூர் (அதிகாலை - 4.10 மணி), ஆயந்தூர் (அதிகாலை - 4.25 மணி), மாம்பழப்பட்டு (அதிகாலை - 4.30 மணி), வெங்கடேசபுரம் (அதிகாலை 4.40 மணி) வழியாக விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது.
வேலூர் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கும், திருவண்ணாமலை (அதிகாலை 3.30 மணி) - விழுப்புரம் இடையே 4, 5, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்படும், என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.