திருப்பத்தூர்
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா
|நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில சித்ரா பவுர்ணமியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில சித்ரா பவுர்ணமியையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 112-ம் ஆண்டாக நடந்தது. இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைள சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து ெகாண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பூங்கரகம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அக்னிகுண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கோவில் திருவிழா முன்னிட்டு கோயில் அருகே நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சாமி தரிசனம் செய்தார். ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜ் எம்.எல்.ஏ. உள்பட பிரமுகர்களும் சாமி தரிசனம் செய்தனர்.
அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் வாணியம்பாடி துணை ோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு வாணவேடிக்கையுடன் நடன நிகழ்ச்சி மற்றும் பாட்டு கச்சேரி நடைபெற்றது.