< Back
மாநில செய்திகள்
சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும்
அரியலூர்
மாநில செய்திகள்

சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும்

தினத்தந்தி
|
30 Nov 2022 1:04 AM IST

சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லாபுரத்தில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளில் வேலைக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழில் பூங்கா போல், அரியலூர் மாவட்டத்திலும் சிப்காட் தொழில் பூங்கா தொடங்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் குடிசை வீடுகளில் வசிப்போர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்