< Back
மாநில செய்திகள்
சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

கல்வராயன்மலை சின்னதிருப்பதி வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

கல்வராயன்மலையில் சின்னதிருப்பதி கிராமத்தில் வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மன்னர்கள் மற்றும் தாகிதார்கள் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்தது. தற்போது இக்கோவில் அறநிலையத்துறை மேற்பார்வையில் ஜாகிதார் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்ட விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வெங்கடாஜலபதிக்கு தினமும் பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரித்து நிறுத்தப்பட்டு இருந்த தேரில் உற்சவர் எழுந்தருளினார். பின்னர் ஜாகிதார்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்