< Back
மாநில செய்திகள்
சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம்

தினத்தந்தி
|
18 Jun 2022 9:53 PM IST

சின்னசேலம் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

சின்னசேலம்,

சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் மாதாந்திர ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல் வரவேற்றார். கூட்டத்தில் சின்னசேலம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றியக்ழு தலைவர் சத்தியமூர்த்தி பேசினார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அடுத்த மாதம்(ஜூலை) 9-ந்தேதி வருகைதரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சின்னசேலம் ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது, மக்கள் தேவையை கருத்தில் கொண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பழுது நீக்குதல், சிறு பாலம் அமைத்தல் மற்றும் வடிகால், வாய்க்கால், அமைக்கும் பணிக்கு ரூ. 11 லட்சத்து 7 ஆயிரம் நிதி ஒதுக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்