< Back
மாநில செய்திகள்
பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது
தர்மபுரி
மாநில செய்திகள்

பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது

தினத்தந்தி
|
31 Aug 2022 9:37 PM IST

தொடர் மழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாரண்டஅள்ளி:

தொடர் மழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியதால் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் சனத்குமார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னாறு அணை நிரம்பியது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி மற்றும் பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 50 அடி உயரம் கொண்ட பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று அணைக்கு வினாடிக்கு 630 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 470 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் மாரண்ட‌அள்‌ளியில் உள்ள சனத்குமார் நதியை வந்தடைந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சனத்குமார் நதியில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரை கண்டு பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தடுப்பணை கட்ட கோரிக்கை

சின்னாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வீணாக கலக்கிறது. இந்த தண்ணீரை முற்றிலும் தடுத்து நிறுத்தி பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்