< Back
மாநில செய்திகள்
சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையம்: புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் 19-ந்தேதி திறப்பு
மாநில செய்திகள்

சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையம்: புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் 19-ந்தேதி திறப்பு

தினத்தந்தி
|
17 Feb 2024 8:05 AM IST

சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தம் பகுதி மீண்டும் திறக்கப்படுகிறது.பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, சின்னமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் பகுதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சின்னமலை மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தம் பகுதி மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வரும் 19-ந்தேதி முதல் பொது பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்படுகிறது.மெட்ரோ பயணிகள் தங்களின் 4 சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்