< Back
மாநில செய்திகள்
பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம்; பள்ளி ஊழியர் கைது
சென்னை
மாநில செய்திகள்

பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம்; பள்ளி ஊழியர் கைது

தினத்தந்தி
|
13 July 2022 6:16 PM IST

பெரும்பாக்கத்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. சிறுமியை பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தி உள்ளனர். ஆனால், அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுது உள்ளார். அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பள்ளியில் பியூனாக வேலை பார்க்கும் ராஜ் (வயது 38) என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ராஜ் எனபவரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்