< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளி மாணவியிடம் சில்மிஷம்: போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
|28 March 2024 8:16 AM IST
சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பெரியபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). இவர் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுபற்றி அம்மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் சேட்டு மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெரியபாபுசமுத்திரம் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற சேட்டுவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.