தீபாவளி ராக்கெட் ஏவிய சிறுவர்கள்.. மொத்தமாக எரிந்து கருகிய குடிசை...!
|தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.
கடலூர்,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை பகுதியில் அனிதா என்பவர் வாடகை வீட்டில் (குடிசை வீடு) வசித்து வருகிறார். இன்று தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ராக்கெட் வெடி வெடித்துள்ளனர்.
அப்போது ராக்கெட் நேராக குடிசை வீட்டின் மேல் விழுந்து வெடித்து சிதறியதில் குடிசை வீடு தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வீடு முழுவதுவமாக எரிந்து நாசமானது.
இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, நகை மற்றும் கல்வி சான்றிதழ்கள் போன்றவை எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.