< Back
மாநில செய்திகள்
5 வயதில் நிறைவேறாத ஆசை.. 50 வயதில் மொட்டை அடித்து காது குத்திய பிள்ளைகள்
மாநில செய்திகள்

5 வயதில் நிறைவேறாத ஆசை.. 50 வயதில் மொட்டை அடித்து காது குத்திய பிள்ளைகள்

தினத்தந்தி
|
3 Sept 2022 7:22 PM IST

சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதை 50 வயதில் பிள்ளைகள் நிறைவேற்றினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் ஜம்படை கிராமத்தைச் சேர்ந்த மொட்டையின் மகன் ஏழுமலை (வயது 50). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர்.

இவருக்கு சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் ஜம்படை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோயிலில் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தி உள்ளனர்.

இந்த நிகழ்சியில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து வைக்கப்பட்டது. 5 வயதில் நிறைவேறாத தனது ஆசை 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் நிறைவேறியதால் ஏழுமலை நெகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் செய்திகள்