< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
குரூப்-2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி
|22 May 2022 4:19 AM IST
குரூப்-2 தேர்வு எழுதிய கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியை சேர்ந்தவர் காசிராஜன். ேபாலீஸ்காரர். இவரது மனைவி அனிதா(வயது 25). நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த குரூப்-2 தேர்வு மையத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த மையத்தின் கண்காணிப்பாளர், அனிதாவை பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு பிரசவத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.