< Back
மாநில செய்திகள்
குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம்; அரியலூரில் 12-ந்தேதி நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம்; அரியலூரில் 12-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
6 Oct 2023 11:19 PM IST

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம் பாடாலூரில் வருகிற 11-ந்தேதியும், அரியலூரில் 12-ந்தேதியும் நடைபெறவுள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தை உரிமைகள், பாதுகாப்பு ஆணையங்கள் சட்டம் 2005-ன் கீழ் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் சட்டப்பூர்வ அமைப்பாகும். இவ்வாணையத்தின் முக்கிய செயல்பாடு, அரசியலமைப்பில் பொதிந்துள்ள பல்வேறு சட்டங்கள் மற்றும் சட்டங்களின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அனைத்து குழந்தைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதை மையமாக கொண்டதாகும். இவ்வாணையத்தின் குழுவானது குழந்தை உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாமினை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 11-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதே போல் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தை உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான குறை தீர்வு முகாம் அரியலூர் மாவட்டத்தில், ஆண்டிமடம் வட்டாரத்தை தேர்வு செய்து வருகிற 12-ந்தேதி காலை 9 மணியளவில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த குறை தீர்வு முகாமினை நடத்துகிறது.

குழந்தை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக...

அரியலூரில் இந்த முகாமில் ஆணைய உறுப்பினர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக பணிபுரியும் பங்கேற்பாளர்கள் முகாமில் கலந்து கொண்டு குழந்தை உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.தங்களது பகுதிகளில் உள்ள குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தைகள், உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தை மற்றும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீட்டுத் தொகை கோருவது, ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மனுக்களை இந்த குறைதீர்வு முகாமில் நேரடியாக கொடுத்து பயன்பெறலாம், என்று அந்தந்த மாவடட கலெக்டர்கள் கற்பகம் (பெரம்பலூர்), ஆனிமோி ஸ்வர்ணா (அரியலூர்) தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்