< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்
|17 Jun 2022 10:55 PM IST
செஞ்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
செஞ்சி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் செஞ்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் தமிழரசன், தொண்டு நிறுவனம் ஜான் வில்லியம், பிரபாகரன் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜான் போஸ்கோ மற்றும் வர்த்தகர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.