< Back
மாநில செய்திகள்
செம்மஞ்சேரியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செம்மஞ்சேரியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு

தினத்தந்தி
|
14 Oct 2023 2:09 PM IST

செம்மஞ்சேரியில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் லெனின். கொத்தனார். இவருடைய குழந்தை வேல்முருகன் (8 மாதம்). நேற்று காலை வீட்டின் படிக்கட்டில் தவழ்ந்த படி குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தது.

இதில் காயமடைந்த குழந்தை வேல்முருகனை சிகிச்சைக்காக கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்