< Back
மாநில செய்திகள்
குழந்தைகள் வளர்ச்சி திட்ட கருத்தரங்கு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

குழந்தைகள் வளர்ச்சி திட்ட கருத்தரங்கு

தினத்தந்தி
|
10 Aug 2023 2:00 AM IST

குழந்தைகள் வளர்ச்சி திட்ட கருத்தரங்கு

வால்பாறை

வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்மார்கள், கர்ப்பிணிகள், புதுமண தம்பதிகளுக்கு ஒருநாள் ஊட்டச்சத்து கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் வால்பாறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதிபிரியா, தாய்மார்கள், கர்ப்பிணிகள், புதுமண தம்பதிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பேசினார். பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பகுதி சுகாதார செவிலியர்கள் தேவகி, சரஸ்வதி ஆகியோர் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பது குறித்து அறிவுரை வழங்கினர். இதில் வால்பாறை நகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த புதுமண தம்பதிகள், தாய்மார்கள், கர்ப்பிணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்