< Back
மாநில செய்திகள்
அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை சாவு - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார்
சென்னை
மாநில செய்திகள்

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை சாவு - போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார்

தினத்தந்தி
|
26 Jun 2022 7:29 AM IST

அரசு டாக்டர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர் புகார் அளித்தார்.

சென்னை வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அஷ்டலட்சுமி (32). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அயனாவரம் மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அஷ்டலட்சுமிக்கு மேல் சிகிச்சை தேவை என கூறி எழும்பூர் மகப்பேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ், அயனாவரம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் அலட்சியத்தால் எனது குழந்தை இறந்தாகவும், எனது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் கூறி தனது குடும்பத்தினருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மீது விசாரணை நடத்தும்படி அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பேரில் அயனாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்