< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
சிறுமி கடத்தல்; காதலன் கைது
|29 Jun 2023 1:59 AM IST
ஏர்வாடி அருகே சிறுமியை கடத்தியதாக அவரது காதலன் கைது செய்யப்பட்டார்.
ஏர்வாடி:
ஏா்வாடிைய அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நாங்குநேரி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். அவரும், மறுகால்குறிச்சியை சேர்ந்த மாடசாமி மகன் செல்வம் (வயது 23) என்பவரும் கடந்த 2 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி மதியம் 2 மணியளவில் மில்லுக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சிறுமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது சிறுமியை செல்வம் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வத்தை கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமியையும் மீட்டனர்.