< Back
மாநில செய்திகள்
விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமைச் செயலாளர் - நேப்பியர் பாலத்தில் பரபரப்பு
மாநில செய்திகள்

விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தலைமைச் செயலாளர் - நேப்பியர் பாலத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
30 Dec 2022 3:30 PM IST

விபத்தில் காயமடைந்த நபருக்கு உதவிக்கரம் நீட்டிய தலைமைச் செயலாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை நேப்பியர் பாலம் அருகே இன்று காலை 9.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அப்போது அந்த வழியே சென்ற தலைமைச் செயலாளர் இறையன்பு, உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்த நபருக்கு முதலுதவி வழங்க ஏற்பாடு செய்தார்.

பின்னர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து காயமடைந்த நபர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் காயமடைந்த நபருக்கு உதவிக்கரம் நீட்டிய தலைமைச் செயலாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்