< Back
மாநில செய்திகள்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை திடீர் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு
மாநில செய்திகள்

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை திடீர் ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு

தினத்தந்தி
|
2 Oct 2022 9:55 AM IST

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளது, பணியில் உள்ள தொய்வை சுட்டி காட்டி அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.

திருவான்மியூர் பக்கிம்காங் கால்வாயில் தூர்வாரும் பணிகளையும் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்