< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக 'லிப்ட்' ஆபரேட்டர் சாவு
|12 Aug 2022 7:57 AM IST
திருவல்லிக்கேணியில் மாடியில் இருந்து தவறி விழுந்த தலைமை செயலக ‘லிப்ட்’ ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மரகதம் சந்திரசேகர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர், சென்னை தலைமை செயலகத்தில் 'லிப்ட்' ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர், திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் விடுதியின் முதல் மாடியில் நின்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.