< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மீலாது நபி கொண்டாடப்படும் தேதியை அறிவித்தார் தலைமை ஹாஜி
|16 Sept 2023 11:27 PM IST
இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை இன்று மாலை தென்பட்டதாக தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மீலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மீலாது நபி பண்டிகை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாகுத்தீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமிய மாதமான ரபி உல் அவ்வல் மாத பிறை இன்று மாலை தென்பட்டது. எனவே, வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) மீலாது நபி விழா கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.