< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : நாளை நடக்கிறது
|4 Jan 2024 11:11 PM IST
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மக்களுடன் முதல்வர் முகாம்கள் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சென்னை
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசின் திட்டங்கள் எளிதில் மக்களை சென்றடையும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5-ந்தேதி (நாளை), 6-ந்தேதி (நாளை மறுநாள்) ஆகிய 2 நாட்களில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த முகாம்களில் பட்டா, ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு உள்பட பல்வேறு திட்டங்களில் பயன் பெற மக்கள் தங்கள் மனுக்களை கொடுத்து, தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.