மக்களுடன் முதல்வர் திட்டம்: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
|அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அனைத்து கட்சி எம்.பி,. எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;
வருகிற 11-ம் தேதியன்று மக்களுடன் முதல்வர் விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன். வரும் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறேன். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழுப்புரம் நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் இந்த விழாவினை தொடங்கி வைப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.