< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் ஒரு பள்ளியில் தொடக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் ஒரு பள்ளியில் தொடக்கம்

தினத்தந்தி
|
24 Jan 2023 1:00 AM IST

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மேலும் ஒரு பள்ளியில் தொடங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவு திட்டமானது முதற்கட்டமாக முத்து நகர், பெரம்பலூர் கிழக்கு, மேற்கு ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் தொடங்கப்பட்டு, அங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 112 மாணவ-மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் அரணாரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 68 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்